ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சங்கு மால் பகுதியில் உள்ள கைலாய நாதர் மற்றும் சமுத்திர முருகன் கோவிலில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, 15க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் செல்போன்கள் திருடு போனதாகத் தகவல் வெளியாகியுள்ளது.