இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்ன பாலம் கடற்கரையில் நேற்று நவ. 08 அன்று சுமார் 200 மீட்டர் கடல் உள்வாங்கியது. இதனால் நாட்டுப் படகுகள் தரை தட்டி நின்றன. மீனவர்கள் படகுகளை மீட்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். சிறிது நேரம் கழித்து கடல் நீர் வழக்கமான அளவுக்கு உயர்ந்ததும் இயல்பு நிலை திரும்பியது.