ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட100 படகுகளில் 3, 400 பக்தா்கள்

72பார்த்தது
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தொடங்கவிருக்கும் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் 3,400-க்கும் அதிகமான தமிழக பக்தர்கள் பயணமாகின்றனர். இந்திய-இலங்கை பக்தர்களின் பாரம்பரிய உறவுத் திருவிழாவாகக் கருதப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 14, 15) நடைபெறுகிறது. 

விழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, கச்சத்தீவு செல்ல 2,720 ஆண்கள், 652 பெண்கள், 92 சிறார்கள் என 3,464 பேர் விண்ணப்பித்தனர். இவர்களை அழைத்துச் செல்ல 78 விசைப் படகுகள், 22 நாட்டுப் படகுகள் தயார் செய்யப்பட்டன

தொடர்புடைய செய்தி