ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மர்மமான முறையில் மாயமாகியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட மரக்கன்றுகளைப் பராமரிக்காமல் வீணடித்ததோடு, தற்போது அவை மாயமானதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.