கடந்த டிசம்பர் 28 அன்று மண்டபம் மீனவர்கள் 3 பேரையும், ஜனவரி 3 அன்று மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. பிப்ரவரி 3 அன்று, இலங்கை நீதிமன்றம் மண்டபம் மீனவர்கள் 2 பேரையும், மயிலாடுதுறை மீனவர்கள் 7 பேரையும் விடுதலை செய்தது. இருப்பினும், 3 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 40 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.