ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில்இன்று (அக்.,4) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லோகநாதன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழக மாநாடு சம்பந்தமாகவும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு எவ்வாறு உதவுவது எனவும் பல்வேறு ஒழுக்க நெறிமுறைகள் பற்றியும் பேசப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக தமிழக வெற்றி கழக நகர் பொறுப்பாளர் லோகநாதன் நன்றி உரையாற்றினார்.