பெங்களூரைச் சேர்ந்த நீச்சல் வீரர்களான டேனீஸ் மற்றும் விருஷாலி தம்பதி, இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளனர். அதிகாலை 4:30 மணிக்கு நீந்தத் தொடங்கி மாலை 3:15 மணிக்கு தனுஷ்கோடியை அடைந்த இவர்களை காவல்துறையினரும் சுற்றுலாப் பயணிகளும் பாராட்டினர்.