ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற மிஸ்டர் சவுத் இந்தியா 2026 ஆணழகன் போட்டியில், கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மிஸ்டர் சவுத் இந்தியா ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார். ராமநாதபுரம் அப்லிப்ட்மென்ட் டைனமிக்ஸ் சார்பில், குமரையா கோயில் பகுதியில் உள்ள தாஜ்பேலஸ் திருமண மஹாலில் முதல் முறையாக நடைபெற்ற இந்தப் போட்டியில், பல்வேறு எடைப்பிரிவுகளில் 120 வீரர்கள் பங்கேற்றனர்.