இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை விடுவிக்கக்கோரி ஏ. ஐ. டி. யு. சி மீனவ தொழில்சங்கம் சார்பில் ராமேஸ்வரம் என். எஸ். கே வீதியில் இன்று (நவ. 6) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் பிச்சை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.