பரமக்குடி அருகே வாகைக்குளம் பகுதியில் மே 18 அன்று நடந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து திரும்பிய சரக்கு வாகனத்தின் மீது ஈச்சர் லாரி மோதியதில் முதலில் ஒருவர் பலியானார். மறுநாள் சிகிச்சை பெற்று வந்த அமுதா உயிரிழந்தார். நேற்று அருணா மற்றும் ராமேஸ்வரி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.