ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று (நவ. 14) தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபீன்சிங் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் கட்டுமானப் பணிகள் முடிந்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.