துடுப்பு படகு மூலம் ஆபத்தான கடலை கடந்து சாதனை

129பார்த்தது
சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த 19 பேர், 9 துடுப்பு படகுகளில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரை சுமார் 16 மணி நேரம் ஆபத்தான கடலைக் கடந்து சாதனை படைத்துள்ளனர். கடல் வளத்தைப் பாதுகாக்கவும், கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் போடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த துடுப்பு படகுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. கடல் சீற்றங்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாகப் பயணம் செய்து அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி