ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிகளில் இருந்து திமுக அதிமுக கட்சி நிர்வாகிகள் தங்களது தலைவர்கள் பசும்பொன்னில் மரியாதை செலுத்த வேண்டிய நிலையில் அவர்களை வரவேற்கும் விதமாக 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர்.
பசும்பொன் - ல் 117 வது தேவர் குருபூஜைக்கு அதிமுக, திமுக கட்சியினர் வாகனங்களில் கிளம்பினர். முன்னதாக தேவர் திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து தலைமையில் அதிமுகவினரும், திமுக சேர்மன் முகமது முத்தார் தலைமையில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என இரு கட்சியினரும் 30 க்கும் மேற்பட்ட வாகனங்களில் பசும்பொன் நோக்கி சென்றுள்ளனர். இதற்கு 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்