மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, தமிழக துணைத் தலைவர் வெங்கடேஷ் மாணிக்கம் என்பவர் அஜித் பவாரின் அஸ்தியை ராமேஸ்வரம் கொண்டு வந்து அக்னி தீர்த்த கடற்கரையில் கரைத்தார். அஸ்திக்கு பால், பன்னீர், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி கடலில் கரைக்கப்பட்டது.