இராமேஸ்வரம் சங்கமால் ஓலைக்கூடா அருகிலுள்ள கைலாய ஈஸ்வரர் சமுத்திர வேல்முருகன் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று மாலையில் இருந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கோவிலைப் பற்றிய முன்னுரை பேச்சு, கருப்பண்ணசாமி ஆட்டம், பவளக்கொடி கும்மியாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.