இராமநாதபுரம் மாவட்டத்தில் 33 விசைப்படகுகள், 1456 நாட்டுப்படகுகள், 497 இயந்திரம் படகுகள் பதிவு செய்யாமல் இயக்கப்படுவது சட்டப்படி குற்றமாகும். கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச் சட்டம், 1983ன் படி, பதிவு செய்யப்படாத அனைத்து படகுகளையும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.