ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு கருதி தடை அறிவிப்பு

419பார்த்தது
ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 65 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, ராமேஸ்வரம் தீவில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி இந்த தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி