மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த 17 வயது பார்வையற்ற நீச்சல் வீராங்கனை ஐஸ்வரி கமலேஷ், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 25 கிலோமீட்டர் தூர பாக்ஜலசந்தி கடலை 11 மணி 15 நிமிடங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளார். அதிகாலை 4 மணிக்கு நீந்தத் தொடங்கிய அவர், பலத்த காற்று மற்றும் மழையையும் கடந்து மதியம் 3:15 மணிக்கு தனுஷ்கோடியை அடைந்தார்.