ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் நேற்று (பிப்ரவரி 12) இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். இராமநாதபுரம் தனியார் அறக்கட்டளை சேர்மன் அமீர் அம்சா, கேணிக்கரை காவல்துறையினரின் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.