கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு

53பார்த்தது
கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அன்று புரட்சிக் கலைஞரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைந்தார். அவர் மறைந்து ஓராண்டு காலம் நிறைவு பெற்ற நிலையில் நேற்று (டிசம்பர் 28) முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 

தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் திரு சிங்கை ஜின்னா அவர்களின் அறிவுறுத்தலின்படி ராமேஸ்வரம் பகுதி பாம்பனில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கியும், கேப்டன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தியும் கேப்டன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை சிறப்பித்தனர். இதில் ஏராளமான அனைத்துக் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தொண்டர்கள் முத்துக்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர், நிர்மல் ராஜ் ஒன்றிய துணைச் செயலாளர், ஜெபமாலை ஆரோக்கியதாஸ் ஊராட்சி கழகச் செயலாளர், தங்கப்பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர், மணிகண்டன் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர், சண்முகம் தொண்டரணி துணைச் செயலாளர், ராஜ் ஊராட்சி மன்ற உறுப்பினர், ஹரிஹரசுதன் ஊராட்சி மன்ற உறுப்பினர், கமலக்கண்ணன் மாவட்ட பிரதிநிதி, அபுல் குதா ஊராட்சி துணை செயலாளர், சூசை இன்னாசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி