பெருங்குளம்: காரும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

52பார்த்தது
விருத்தாச்சலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா வேனில் 15 பேர் அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்துள்ளனர். சுற்றுலா வேன் உச்சப்புள்ளி அடுத்த நதிப்பாலம் விளக்கு விளக்கு மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது எதிரே ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த காரின் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் எதிரே வந்த சுற்றுலா வேன் மீது நேருக்குநேர் மோதியது.

இதில் காரை ஒட்டிவந்த கீழக்கரை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (29) மற்றும் சுற்றுலா வேனில் வந்த 12 வயது மகாலட்சுமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இருவரது உடலும் உடற்கூறாய்வுக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக உச்சிப்புளி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி