ராமநாதபுரத்தில் காரின் மேற்கூரையில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூச்சலிட்டுச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், பொதுத் தொல்லை மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட காரைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.