ராமநாதபுரம்: சி. சி. டி. வி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை

54பார்த்தது
ராமநாதபுரம் உள்கோட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 7 இடங்களில் தானியங்கி உயர்தர கண்காணிப்பு கேமராக்களும், 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. 

மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் 3 நான்கு சக்கர வாகனங்கள், 3 இரு சக்கர வாகனங்கள் என 7 வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி இணைப்புடன் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த, அனைத்து கேமராக்களின் பதிவுகளை ஒரு இடத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நடைபெற்றது. இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் திறந்து வைத்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் என். யு. சிவராமன், ஆய்வாளர்கள் பாஸ்கரன், பொன்தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ராமேசுவரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா பொருத்தியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். ராமேசுவரத்தில் வீடுகள் விடுதிகளாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது என்றார் அவர்.

தொடர்புடைய செய்தி