ராமேஸ்வரம் சம்பை கிராமப் பகுதியில் உள்ள விவேகானந்தர் நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளியின் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் நடனம் ஆடி, பாடி மகிழ்வித்தனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.