பரமக்குடியில் கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து

1பார்த்தது
பரமக்குடி அருகே தனியார் கல்லூரி மாணவிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட பலர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி