இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வனத்துறை சார்பில் ஒத்திசைக்கப்பட்ட நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பிப்ரவரி 14 மற்றும் 15 தேதிகளில் வன உயிரினக் கோட்ட வன உயிரினக் காப்பாளர் திரு. அகில் தம்பி, இ. வ. ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சக்கரக்கோட்டை, தேர்த்தங்கால், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் மற்றும் மேல - கீழ செல்வனூர் ஆகிய 5 பறவைகள் சரணாலயங்கள் மற்றும் இராமநாதபுரம், மண்டபம், கீழக்கரை வன உயிரினச்சரங்கள் உட்பட 17 இடங்களில் வனச்சரக அலுவலர்கள் திவாகர், ஜினோ, கௌசிகா உள்ளிட்ட குழுவினர் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.