ராமநாதபுரம் அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு மினி வேன் ஓட்டி செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக மயில் ஒன்று அடிபட்டு இறந்துள்ளது. இதைக் கண்ட வண்ணாங்குண்டைச் சேர்ந்த ஞானபாண்டியன் ஆத்திரமடைந்து, முருகனின் வாகனம் (மயிலைக் கொன்று விட்டாயா?) எனக் கூறி கத்தியால் குத்தியதில் சங்கரநாராயணன் உயிரிழந்தார். இவ்வழக்கில் குற்றவாளி ஞானபாண்டியனுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.