வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதை அடுத்து, பாம்பன் கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.