தேவிபட்டினம் சித்தார்கோட்டை அருகே பூசாரி நகர் பகுதியில் மே 25 மாலை ரோட்டோரம் இருந்த பனை மரக்காட்டில் தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தால் காடு முழுவதும் பரவிய தீயில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை, தென்னை, கொய்யா மரங்கள் எரிந்தன. இலந்தை கூட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தீ பரவியதால் அப்பகுதி தோப்புகளில் இருந்த கொய்யா, சவுக்கு, ஆர்.எஸ்.பதி மரங்கள் உள்ளிட்ட பல்லாயிரம் மரங்கள் சேதமடைந்தன. ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.