நேற்று ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஓசூர் பகுதியைச் சேர்ந்த முரளி என்ற பக்தர், இலவச கழிப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த சாலையோர வியாபாரிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக அவர் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.