வைகாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இங்கு புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும், ராமநாதசுவாமி ஆலயத்திற்குள் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.