ராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் கவரங்குளம் பகுதியைச் சேர்ந்த திவ்யா தனது குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த கூல்டிரிங்ஸ் காலாவதியானது.
இதுகுறித்து கடைக்காரர்களிடம் கேட்டபோது அவர்கள் அதை பறித்துள்ளனர். இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்