இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மே. 29) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். விவசாயிகள் பலர் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர்.