ஓலைக்கூடா கோயில் கலசத்தில் தானியம் நிரப்புதல்

377பார்த்தது
இராமேஸ்வரம் சங்கமால் ஓலைக்கூடா அருகிலுள்ள "கைலாய ஈஸ்வரர் சமுத்திர வேல்முருகன்" ஆலயத்தில் நாளை (நவ. 10) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோபுர கலசத்தில் வரகு தானியம் நிரப்பப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வரகு தானியத்தை கலசத்தில் நிரப்பினர். மேலும், யாகசாலை இரண்டாம் நாள் பூஜை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி