குப்பையில் பற்றிய தீயை போராடி அணைத்த தீயணைப்புத்துறை

0பார்த்தது
ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியில், கருவேலம் மற்றும் குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீயானது மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி