ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நகரில் மீன், ஆடு, கோழி இறைச்சி விலைகள் உயர்ந்துள்ளன. சீலா மீன் ஒரு கிலோ 800 ரூபாய், கொடுவா மீன் 500 ரூபாய், பாறை மீன் 400 ரூபாய், நகரை மீன் 200 ரூபாய் என விற்கப்படுகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 950 முதல் 1000 ரூபாய் வரையிலும், பிராய்லர் கோழி 280 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.