ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் நகரில் சீலா மீன் ஒரு கிலோ 850 ரூபாய்க்கும், கொடுவா மீன் 400 ரூபாய்க்கும், பாறை மீன் 400 ரூபாய்க்கும், நகரை மீன் 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி விலை கிலோ 900 முதல் 950 ரூபாய் வரையிலும், பிராய்லர் கோழி 230 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.