பாம்பன் சின்னப்பாளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான நாட்டுப்படகுகள் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் படகுகளின் ஆய்வுகள் இன்று (ஜூன் 6) நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மீனவர்களின் படகுகளை ஆவணங்களுடன் சரிபார்த்து ஆய்வு செய்தனர்.