தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் இருவர் மாயம். கடலோர காவல் படையினர் மாயமான மீனவர்களைத் தேடி வருகின்றனர். வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என மீன்வளத்துறை சார்பில் ஏற்கனவே மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.