ராமநாதபுரம் மாவட்டத்தில், மீன் பிடி தடைக் காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல உள்ள நிலையில், மீனவர்கள், இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக்கொண்டார். மீனவர் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், குடிநீர், நிவாரணம், டீசல் மானியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.