ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா நேற்று (பிப்-8) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.