ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கல்யாண வைபவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமாயண காலத்தில் ராமபிரான் பூஜித்த இந்த ஆலயம், விநாயகருக்கு சித்தி புத்தி தேவியுடன் திருமணம் நடைபெறும் தமிழகத்தின் ஒரே ஸ்தலமாகும். இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. எட்டாம் நாள் விநாயகரின் திருக்கல்யாணம் நடைபெறும்.