பாரம்பரிய கரை வலை மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் நான்கு அரியவகை கடல் ஆமைகள் சிக்கின. அவற்றை உயிருடன் மீட்டு பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மீன் பிடி வலைகளில் சிக்கும் ஆமைகளை மீண்டும் பத்திரமாக கடலில் விட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மீனவர்கள் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.