ராமநாதபுரம்: சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கிராம உதவியாளர்கள் கைது

397பார்த்தது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.