மண்டபம் வட்டாரம் காந்திநகர் காட்டுப் பகுதியில் காட்டெருமை ஒன்று வலம் வருவதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து, வனத்துறையினரும் போலீசாரும் இணைந்து காட்டெருமையைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், துணியால் கட்டி கிரேன் உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது. காட்டெருமை பிடிபட்டதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமின்றி நிம்மதியடைந்தனர்.