தனுஷ்கோடி அடுத்த அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் மேக்சி கேப் வாகனமும் டாடா மேஜிக் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், படுகாயம் அடைந்த ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.