டிட்வா புயலுக்குப் பிறகு 10 நாட்கள் கழித்து பாம்பன் மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. நேற்று (டிசம்பர் 3) கரை திரும்பிய மீனவர்களுக்கு சாவாளை, ஓரா, முண்டக்கண்ணி போன்ற மீன்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. இருப்பினும், மீன்களின் வரத்து அதிகமாக இருந்தும், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.