இந்திய விமானப்படையைச் சேர்ந்த 16 அதிகாரிகள், சாலை பாதுகாப்பு மற்றும் சைக்கிள் பயணத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியில் இருந்து 4,500 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு ராமேஸ்வரம் வந்தடைந்தனர். அங்கு அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் தனுஷ்கோடியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.