ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

0பார்த்தது
டெல்லியில் செங்கோட்டையில் நேற்று மாலை நடந்த கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ரயில்வே காவலர்கள் பயணிகளின் உடமைகளையும், பயணிகளையும் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.