இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

378பார்த்தது
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் ஜனவரி 14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று நான்காவது முறையாக ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி மீனவர்களை மார்ச் 3 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.